திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் மாரடைப்பால் காலமானார்
பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான திரு. மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 78. இவர் வழுவூர்(மயிலாடுதுறை) பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில்
10 December 1943 இல் பிறந்தார். இவரது முழுப்பெயர் வழுவூர் மாணிக்க விநாயகம் ராமைய்யா பிள்ளை. இவரது தந்தை பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்.
இசை மற்றும் சினிமாத்துறை
இசை மற்றும் சினிமாத்துறையில் இவரது பங்களிப்பு ஏராளம். 2001 தில் திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் 2003 திருடா திருடி படத்தில் தனுஷ் அவர்களுக்கு தந்தையாகவும் அறிமுகமானார்.
அதேபோல், விஜய் நடித்த வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு,பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு இலங்கை வவுனியாவில் கட்டப்பட்ட ஒரு கோயில் விழாவில் பாடுவதற்காக மாணிக்க விநாயகம் உள்ளிட்ட சிலர் இலங்கை பயணிக்க இருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் இசைக் கலைஞர்கள் இலங்கை செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டில் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.அதன் பின்னர், தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தாம் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்வதாக அப்போது மாணிக்க விநாயகம் அறிவித்தார். அப்போது இவருடன் இலங்கை செல்லவிருந்த பிற இசைக் கலைஞர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இவர் அவ்வப்பொழுது விஜய் தொலைக்காட்சி பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பக்தி சுற்றுகளில் நடுவராகவும் விருந்தினராகவும் கலந்துகொள்வார் .
இந்த நிலையில் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம், வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
No comments:
Post a Comment