Translate

Thursday, November 18, 2021

நாளுக்கு நாள் நூதன முறையில் ஏமாற்றுவது அரங்கேறி வருகிறது

 


கடந்த வாரம் எனக்கு ஒரு புது அனுபவம்.


27.10.2021 - அன்று எனது வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம்.மூலம் ரூ.5000/- எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.


உங்கள் கணக்கிலிருந்து பணம் ஏதும் எடுக்கவில்லையென்றால் உடன் இந்த எண்ணை தொடர்பு கொள்க என ஒரு எண்ணும் தரப்பட்டிருந்தது.


நான் அப்படி எந்த பணமும் எடுக்கவில்லை. ஏ.டி.எம். கார்டும் என்னிடமே பத்திரமாக இருந்தது.


மேலும் ரூ.5000/- எடுத்தது போக என் கணக்கில் பேலன்ஸ் உள்ள தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது கணக்குப்படி அந்த தொகையிலும் நிறைய வித்தியாசம் இருந்தது.


என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள உடனடியாக ஏ.டி.எம்.சென்று மினிஸ்டேட்மெண்ட் எடுத்துப் பார்த்தேன். அதில் ரூ.5000/- எடுத்ததற்கான குறிப்பு எதுவுமில்லை. தவிர எனது கணக்கில் இருக்க வேண்டிய பணமும் சரியாகவே இருந்தது.


இது குறித்த வங்கி ஊழியரான நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன்.


முன்பெல்லாம் உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது, கணக்கில் பணம் போட வேண்டும் என விபரம் கேட்டு ஏமாற்றுவார்கள். அது கொஞ்சம் பழைய முறையாகி விட்டதால், தற்சமயம், நமது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி விபரம் கேட்டு, அதை வைத்து கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். 


நமது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிந்தால் உடன் நாம் பதறிப் போய் அவர்கள் தந்துள்ள எண்ணை தொடர்பு கொண்டு விசாரிப்போம். அப்போது  தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது, மீண்டும் உங்கள் கணக்கில் சேர்த்து விடுகிறோம். அதற்கு வங்கி கணக்கு விபரம் தாருங்கள் என்று கேட்டு ஏமாற்றி விடுவார்கள் என விளக்கினார்.



நாளுக்கு நாள் நூதன முறையில் ஏமாற்றுவது அரங்கேறி வருகிறது, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். நன்றி.

   - எஸ்.இராஜேந்திரன்

     கபிஸ்தலம்.

1 comment:

நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 50 சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள்

50 சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள் உடலில் வலிமையான தசை நாக்கு. " The quick brown fox jumps over the lazy dog" என்ற வாக்கியத்தில் ...