Translate

Wednesday, December 8, 2021

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் : அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் : அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பல உயரதிகாரிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.   குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  மீதமுள்ளவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.  சிலரின் உடல், விபத்து நிகழ்ந்த இடத்தின் மலைப் பள்ளத்தாக்குகளில் கிடப்பதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததை உறுதி செய்தது இந்திய விமானப்படை.  இந்த விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ராணுவம் உத்தரவுவிட்டுள்ளது.  மேலும் அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் விபத்து குறித்தும் அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணையின் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்.  விபத்து நடைபெற்ற இடத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம்

1.எல்.எஸ்.லிடர் 
2.மதுலிகா ராவத் 
3.பிபின் ராவத் 
4.விவேக் குமார்
5.ஜிதேந்திர குமார்
6.ஹர்ஜிந்தர் சிங்
7.சாய் தேஜா
8.ஹாவ் சாட்பால்
9.குருசேவாக் சிங்


 

No comments:

Post a Comment

நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 50 சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள்

50 சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள் உடலில் வலிமையான தசை நாக்கு. " The quick brown fox jumps over the lazy dog" என்ற வாக்கியத்தில் ...