Translate

Monday, November 29, 2021

இன்று நாளையும் எங்கெல்லாம் மழை பெய்யும் வானிலை மையத்தகவல்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 


இன்று (29.11.2021) விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நாளை செவ்வாய்(30.11.2021): கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புதன் 01.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை எட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

வியாழன் 02.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை உட்டிய உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளி
ல் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

வெள்ளி 03.12.2021; தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் உரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை : சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்ன. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Thursday, November 18, 2021

நாளுக்கு நாள் நூதன முறையில் ஏமாற்றுவது அரங்கேறி வருகிறது

 


கடந்த வாரம் எனக்கு ஒரு புது அனுபவம்.


27.10.2021 - அன்று எனது வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம்.மூலம் ரூ.5000/- எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.


உங்கள் கணக்கிலிருந்து பணம் ஏதும் எடுக்கவில்லையென்றால் உடன் இந்த எண்ணை தொடர்பு கொள்க என ஒரு எண்ணும் தரப்பட்டிருந்தது.


நான் அப்படி எந்த பணமும் எடுக்கவில்லை. ஏ.டி.எம். கார்டும் என்னிடமே பத்திரமாக இருந்தது.


மேலும் ரூ.5000/- எடுத்தது போக என் கணக்கில் பேலன்ஸ் உள்ள தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது கணக்குப்படி அந்த தொகையிலும் நிறைய வித்தியாசம் இருந்தது.


என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள உடனடியாக ஏ.டி.எம்.சென்று மினிஸ்டேட்மெண்ட் எடுத்துப் பார்த்தேன். அதில் ரூ.5000/- எடுத்ததற்கான குறிப்பு எதுவுமில்லை. தவிர எனது கணக்கில் இருக்க வேண்டிய பணமும் சரியாகவே இருந்தது.


இது குறித்த வங்கி ஊழியரான நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன்.


முன்பெல்லாம் உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது, கணக்கில் பணம் போட வேண்டும் என விபரம் கேட்டு ஏமாற்றுவார்கள். அது கொஞ்சம் பழைய முறையாகி விட்டதால், தற்சமயம், நமது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி விபரம் கேட்டு, அதை வைத்து கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். 


நமது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிந்தால் உடன் நாம் பதறிப் போய் அவர்கள் தந்துள்ள எண்ணை தொடர்பு கொண்டு விசாரிப்போம். அப்போது  தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது, மீண்டும் உங்கள் கணக்கில் சேர்த்து விடுகிறோம். அதற்கு வங்கி கணக்கு விபரம் தாருங்கள் என்று கேட்டு ஏமாற்றி விடுவார்கள் என விளக்கினார்.



நாளுக்கு நாள் நூதன முறையில் ஏமாற்றுவது அரங்கேறி வருகிறது, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். நன்றி.

   - எஸ்.இராஜேந்திரன்

     கபிஸ்தலம்.

#வீட்டில்பார்த்தமாப்பிள்ளைய_பிடிக்கல.

 

#வீட்டில்பார்த்தமாப்பிள்ளைய_பிடிக்கல.

பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.
BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.

இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.
இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.

வருமானம் அதிகமில்லை என்பதாலும்,
இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டே 
இருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.
உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.

இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
"வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.

இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.
""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல.
நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.
ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.
இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன். 
நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.
விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""

ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

வாழ்த்துக்களுடன்.



<a target="_blank" href="https://www.amazon.in/b?_encoding=UTF8&tag=wilbirit-21&linkCode=ur2&linkId=5d1061563fc95c2975ed965e2a432c67&camp=3638&creative=24630&node=1374494031">Health </a>

நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 50 சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள்

50 சுவாரஸ்யமான அறியப்படாத உண்மைகள் உடலில் வலிமையான தசை நாக்கு. " The quick brown fox jumps over the lazy dog" என்ற வாக்கியத்தில் ...